எபிரெயர், இரண்டாம் அதிகாரம் #1 57-0825M 1. …இங்கே கடந்த வகுப்பில் இருந்து…கேட்டு களிகூர்ந்தீர்கள்…[ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] இப்பொழுது எபிரெயர் முதலாம் அதிகாரத்தில் பவுல் இந்த நிருபத்தை எழுதியுள்ளார் என்று நாம் கண்டறிந்தோம், இல்லை நாம் விசுவாசிக்கிறோம். வேதபண்டிதர்களுக்கு கடைசிவரை அது எது அல்லது யார் அதை எழுதினது என்று கூட தெரியவில்லை. ஆனால் எவருமே சிறிது ஆவிக்குரிய பகுத்தறிதலைக் கொண்டு அதை பவுல் தான் எழுதினான் என்பதைக் காணலாம் என்று நான் நம்புகிறேன். அது—அது பெரும்பாலான எழுத்தாளர்களால் பவுல் தான் எழுதியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. அவன் அதை எப்படி… 2 முதலாம் அதிகாரத்தில், அது கர்த்தராகிய இயேசுவை உயர்த்திக் கூறினவற்றை நாம் கண்டறிந்தோம். ஓ, பவுல் தமஸ்குவிற்கு போகும் தன்னுடைய வழியில் உண்டாயிருந்த அனுபவத்தின் மூலம் எப்படியாய் அதை விளக்கிக் காண்பித்தான். இப்பொழுது, பவுல் துவக்கத்தில், உண்மையாகவே ஒரு வேதபண்டிதனாயிருந்தான். பவுல் அந்த நாளில் மிகச் சிறந்த ஆசிரியர்களில் ஒருவரான கமாலியேலின் கீழ் கற்பிக்கப்பட்டிருந்தான். அவன் புத்திக் கூர்மையும், அறிவாற்றலும் கொண்ட ஒர் உண்மையான விவேகமுள்ள வேத பண்டிதனாயிருந்தான். 3 ஆசீர்வதிக்கப்பட்ட பண்டைய சுவிசேஷ பாதையில் இருந்த அனைவரையும் கைது செய்ய, பவுல் தன்னுடைய சட்டைப் பையில் கடிதங்களோடு, தமஸ்குவிற்கு செல்லும் தன்னுடைய பாதையில் இருந்தபோது, அந்த மனிதன் உத்தமமாயிருந்தான் என்பதையே நான் இதில் கண்டறிந்தேன். ஆனால் ஸ்தேவான் மரிப்பதை பவுல் கண்ட காரணத்தால், நான் அதை எப்பொழுதும் விசுவாசித்திருக்கிறேன். எனவே அது அவனை அடுத்தபடியாக உடனே பற்றிப் பிடித்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவன் ஸ்தேவானுடைய மரணத்திற்கு சம்மதம் தெரிவித்தபோது, அவனைக் கல்லெறிந்தவர்களின் வஸ்திரங்களை கழற்றி அவன் பாதத்தருகே வைத்தபோது, பவுல் ஸ்தேவானுடைய இரத்தத்திற்கு குற்றவாளியாயிருந்தான். எனவே அவன், “நான் பாத்திரவான் அல்ல, ஏனென்றால் நான் அவருடைய—அவருடைய இரத்த சாட்சியான ஸ்தேவானின் இரத்தத்தை சிந்தினேன்” என்று கூறி அறிக்கையிட்டான். காரணம், அவன் அதற்கு சாட்சிக் கூறினான். 4 நீங்கள் எந்தக் காரியத்திற்காவது சாட்சி கூறினால், நீங்கள் அதற்கு பங்காளியாயிருக்கிறபடியால், நீங்கள் குற்றவாளியாயிருக்கிறீர்கள். ஆகையால் நாம், “ஓ, ஆம், அவர்கள் இதை செய்திருக்கக் கூடாது, இதை இன்னின்னதை செய்திருக்கக் கூடாது” என்று கூறி சாட்சிப்பகர்ந்தால், நீங்கள் என்னக் கூறுகிறீர்கள் என்பதைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள், ஏனென்றால் உங்களுடைய நியாயத்தீர்ப்பு போகிற வழியிலே நீங்கள் குற்றவாளியாயிருக்கிறீர்கள். உங்களால் தீர்மானிக்க முடியவில்லையென்றால், ஒன்றுமே கூறாமல், அதை அப்படியே விட்டுவிடுங்கள். ஆகையால் நீங்கள் ஒரு கிறிஸ்தவன் என்று சாட்சிப்பகரும்போது, அப்பொழுது நீங்கள் குற்றவாளியாயிருக்கிறீர்கள். புரிகிறதா? நீங்கள் ஒரு கிறிஸ்தவனாயிருப்பதனால் குற்றவாளியாயிருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் அதன்படி ஜீவிக்க வேண்டும். தேவன் வேதாகமத்தில் ஒரு வாக்குத்தத்தத்தை உண்டுபண்ணுகிறபோது…இங்கே ஒரு மனிதன் ஒரு சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைக் காண்கிறேன். தேவன் ஒரு வாக்குத்தத்தத்தை உண்டுபண்ணுகிறபோது, அவர் அதை நிறைவேற்றினாலொழிய, அவர் அந்த வாக்குத்தத்தத்தை குறித்து குற்றவாளியாயிருக்கிறார். தேவன் ஒரு வாக்குத்தத்தத்தை உண்டுபண்ணுகிறபோது, அவர் குற்றவாளியாயிருக்கிறார். வேதவாக்கியங்கள் நிறைவேற்றப்படுகின்ற வரையில் அவைகள் குற்றமானவைகளாயிருக்கின்றன. புரிகிறதா? தேவன் ஒரு வாக்குமூலத்தை கூறியிருக்கிறபடியால், அவைகள்—அந்த வேதவாக்கியங்கள் சரியாயிருக்கின்றன. அது நிறைவேற்றப்பட வேண்டும், இல்லையென்றால் தேவன் குற்றவாளியாயிருக்கிறார். புரிகிறதா? 5 ஆகவே பவுல், ஒர் உபாத்தியாயனாயிருந்தபடியினால், ஏறக்குறைய மதிய வேளையில் அந்த நாளில் அவன் தமஸ்குவிற்கு செல்லும் தன்னுடைய பாதையில் வந்துகொண்டிருந்தான் என்று நான் நினைக்கிறேன். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு மகத்தான ஒளி பிரகாசித்தது. அது அவனை குருடாக்கினது. அவன் தரையிலே விழுந்தான். அது யார் என்பதை அவன் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவன் கேட்டதாகக் கூறினான். அப்பொழுது ஒரு சத்தம் பேசினது என்றும், அது “சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பபடுத்துகிறாய்?” என்று கூறினது என்றும் கூறினான். அது அப்போஸ்தலர் 8-ம் அதிகாரம் என்று நான் நம்புகிறேன். அப்பொழுது அவன், “நான் யாரைத் துன்பப்படுத்துகிறேன்?” என்று கேட்டான். 6 அப்பொழுது அந்த சத்தம், “நான் இயேசு” என்று திரும்பிக் கூறிற்று. ஓ! “நான் இயேசு, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்றார். அப்பொழுது இயேசு என்னவாயிருந்தார்? இயேசு, அவர் ஒளியாய், ஒரு பெரிய பிரகாசிக்கிற ஒளியாயிருந்தார். 7 இப்பொழுது இங்கே ஒரு அடிப்படை ஆதாரத்தைப் புரிந்து கொள்ளும்படியாக இது நம்மை உற்சாகப்படுத்துகிறது. அவர் ஒரு மனிதனாயிருந்தபோது, அவர் எப்படி ஒரு ஒளியாயிருந்தார்? இப்பொழுது, எவருமே…இல்லை… பவுல் கைதுசெய்ய சென்றுகொண்டிருந்தபோது, அவனோடு ஒரு கூட்ட போர்வீரர்களும், ஆலயக் காவலர்களுமே இருந்தனர். பவுல் தலைமை தளபதியாயிருந்தான். அவர்கள் அந்த ஜனங்களை அவர்களுடைய கூட்டங்களில், அவர்கள் தங்களுக்குள் கொண்டிருந்த மத நம்பிக்கைக்காக கைது செய்ய சென்றுகொண்டிருந்தனர். 8 ஆனால், இப்பொழுது, இங்கே இயேசு ஒரு பெரிய ஒளியாக இருந்தார். இப்பொழுது நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்களேயானால், ஆதியிலே இயேசு ஒரு ஒளியாக இருந்தார். இயேசு தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற லோகாஸாயிருந்தார். அவர்…அவர் இஸ்ரவேல் புத்திரரை வனாந்திரத்தினுடாக வழிநடத்தின உடன்படிக்கையின் தூதனாயிருந்தார். அவர்கள் நோக்கிப் பார்த்த அக்கினி ஸ்தம்பமாய் அவர் இருந்தார். அவர் பூமியின் மேலிருந்தபோது, அவர், “நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன். நான் மறுபடியும் தேவனிடத்திற்குச் செல்கிறேன்” என்றார். ஆகையால் அவர் ஒர் அக்கினி ஸ்தம்பத்திலிருந்து ஒரு மனிதனுக்குள்ளாக வந்தார். அதன்பின்னர் அவர் எங்கே இருந்தாரோ அங்கே திரும்பிச் சென்றார். அவர் மீண்டும் ஒரு ஒளியாகத் திரும்பிச் சென்றார். அங்கே இருந்த அவரை பவுல் கண்டபோது, அவர் ஒரு ஒளியாய் இருந்தார். 9 இப்பொழுது பவுலோடிருந்த அந்த போர்வீரர்கள் எல்லோரும் அந்த ஒளியைக் காணவில்லை. ஒருவர் அதைக் காண முடியும் என்பதும், மற்றவர்கள் அதைக் காணவில்லை என்பதும் சாத்தியமா? நிச்சயமாக. சரி. பவுல் அதைக் கண்டான், ஆனால் அவனோடிருந்த மற்றவர்களோ அந்த ஒளியைக் காணவில்லை. 10 இப்பொழுது, பேதுரு சிறைச் சாலையில் இருந்தபோது, இந்த ஒளி சிறைச் சாலைக்குள்ளே வந்து, சிறைக் கதவுகளைத் திறந்தது என்பதை நாம் கண்டறிந்தோம். அவர்…அந்த ஒளி மற்றக் காவலர்களை குருடாக்கினது, அவர்கள் நடந்து கொண்டிருந்தபோது, பேதுரு வெளியே சென்றான். அவன் சிறைச்சாலை வாசலண்டை வந்தபோது, அது தானாய் அமைதியாய் திறவுண்டு, அவனுக்குப் பின்னே தானாகவே மூடிக்கொண்டது. அவன் உட்காவலறையிலிருந்து, வெளியே உள்ள கதவண்டை நடந்து சென்றான். அது தானாய் திறவுண்டு, அமைதியாய் பின்னர் மூடிக்கொண்டது. அப்பொழுது அவன் அதின் வழியாய் நடந்து, நகரத்தின் வீதிக்குள்ளாக சென்றான். அவன், “நான் சொப்பனங் கண்டு கொண்டிருந்தேனா?” என்று கூறுவதுபோல தன்னுடைய கண்களைத் தேய்த்தான். என்ன சம்பவித்திருந்தது என்பதை அவன் அறியாதிருந்தான். ஆனால், கர்த்தருடைய தூதன், சிவந்த சமுத்திரத்தண்டை மோசேயினிடத்தில் அக்கினி ஸ்தம்பமாய் நடந்து சென்று, அதன்மேல் பரம்பி நிற்க, ஓ, அந்த சிவந்த சமுத்திரமானது…சிவந்த சமுத்திரமானது, பிளந்து இருபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நிற்க, இஸ்ரவேலர் அதன் நடுவாக வெட்டாந்தரையில் கடந்துபோனார்கள். 11 அவர்கள் பெருக்கெடுத்து ஓடும் யோர்தானண்டை வந்த போது, அவர் தம்மை அங்கே காணக்கூடியவராக வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவர் அங்கே இருந்தார், ஏனென்றால் அவர் அதை இரண்டாகப் பிரித்தார். சமவெளிகள் முழுவதும் தண்ணீரால் நிரம்பியிருந்த ஏப்ரல் மாதத்தில் அவர்கள் அதனைக் கடந்து சென்றனர். அவர் வசந்த காலத்தில் நிறுத்தி வைத்திருந்தார். அவர் பனி உருகுவதை நிறுத்தி வைத்திருந்தார், ஏனென்றால் அது மதில்போல் உயரமாய், உயரமாய் எழவில்லை. அது அப்படியே நிறுத்தப்பட்டது. அதுவே நம்முடைய யேகோவாவாய் உள்ளது. அதுவே நம்முடைய கர்த்தராகிய இயேசுவாய் உள்ளது. அப்படியே நின்றுபோனது; அப்பொழுது அவர்கள் உலர்ந்த தரையினூடாக நடந்து சென்றனர். 12 இப்பொழுது, தேவன் அவர்களை கவனித்துக்கொள்வதாக வாக்களித்திருந்தார், ஆகையால் அவர் தம்முடைய வாக்குத்தத்திற்கு கடமைபட்டவராயிருந்தார். இப்பொழுது, பவுல், இந்தக் காரியங்களைக் குறித்து அறிந்து, அவைகளை தெரிந்து வைத்திருந்தான். அவன் சிலாக்கியம் பெற்றவனாயிருந்தான், ஏனென்றால் தேவன் பவுலினிடத்தில் நேரடியாக பேசிக்கொண்டிருந்தார். அவர் அவனோடிருந்த போர்வீரர்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கவில்லை. அவர் பவுலினிடத்தில் மாத்திரம் பேசிக் கொண்டிருந்தார். 13 இப்பொழுது, கர்த்தருடைய தூதன் ஒரு நட்சத்திர ரூபத்தில் இறங்கி வந்தபோது, நட்சத்திரத்தை உற்று நோக்குபவர்கள், இந்தியாவின் வான சாஸ்திரிகள், அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டு, அதை நூற்றுக்கணக்கான மைல்கள் பின் தொடர்ந்தனர். அது ஒவ்வொரு வானிலை ஆய்வுக் கூடத்தையும் கடந்து சென்றது, ஏனென்றால் அவர்கள் நேரத்தை நட்சத்திரத்தைக் கொண்டே கணித்து வந்தனர். வான சாஸ்திரிகளைத் தவிர வேறுயாரும் அந்த நட்சத்திரத்தைக் காணவேயில்லை, ஓ, என்னே! அது உங்களை சிலிர்ப்பூட்டுகிறதல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 14 ஆகையால், நீங்கள் பாருங்கள், தேவன் ஸ்தாபனங்களோடு இடைபடுகிறதில்லை. அவர் ஜனக்குழுக்களோடு இடைபடுகிறதில்லை. அவர் தனிப்பட்ட நபர்களோடு இடைபடுகிறார். அவர் தனிப்பட்ட நபர்களுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார். இப்பொழுது இதைக் கூற, இதை அல்ல,…தேவன் என் இருதயத்தை அறிந்திருக்கிறார். இதை சொந்த நபருக்காக, சொந்த புகழ்ச்சிக்காக இப்பொழுது கூறவில்லை; அப்படியே அங்கே இருக்க வேண்டும். ஆனால் அதே மாறாத தேவன், அந்த மாறாத இயேசு இந்தக் காலையில் நம்மோடு இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்களா? அவர் இங்கிருக்கிறார் என்பதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் அதைக் குறித்த ஒரு சிறு, தனிப்பட்ட சாட்சியை உடையவராயிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?…அவர் மற்ற நாட்களில் செய்யாத ஒரு காரியத்தை இந்த நாளில் அவர் நமக்காக அதை செய்திருக்கிறார்; இந்த நாளில் அவர் தம்முடைய புடைப்படம் எடுக்கப்பட அனுமதித்திருந்தார். நாம் அதை அங்கே தொங்க வைத்துள்ளோம். பார்த்தீர்களா? அக்கினி ஸ்தம்பம், அதே கர்த்தராகிய இயேசு. 15 அவர் இப்பொழுது எப்படி கிரியை செய்கிறார் என்பதை கவனியுங்கள். அவர் அதே கர்த்தராகிய இயேசுவாயிருப்பாரேயானால், அவர் அதேக் காரியங்களைச் செய்வார், ஏனென்றால் வேதம், “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று உரைத்துள்ளது. 16 இப்போது, பவுல் எந்தக் காரியத்தையும் அறிவிப்பதற்கு முன்பு, இது சரியா அல்லது தவறா என்று கண்டறிய, அது வேதப் பிரகாரமானதா அல்லது இல்லையா என்பதைக் கண்டறிய அவன் முதலில் எகிப்திற்கு சென்று, மூன்று வருடங்கள் செலவழித்தான். நீங்கள் எப்போதாவது அதை அறிந்திருக்கிறீர்களா? பவுல் மனமாற்றத்திற்குப் பிறகு, அவன் எகிப்திற்கு சென்று மூன்று வருடங்கள் இருந்தான். அங்கே அவன் தரித்திருந்து, அங்கேதான் அவன் இந்த மகத்தான ஞானத்தை கற்றுக்கொண்டான். 17 இப்பொழுது, எந்த ஒப்பிடுதலிலும் இல்லாமல், பரிசுத்த ஆவியானவர் எப்படி இன்னமும் மாறாதவராயிருக்கிறார் என்பதையே நான் உங்களுக்கு அப்படியே கூறிக்கொண்டிருக்கிறேன். இப்பொழுது, இங்குள்ள என்னுடைய சபை அங்கத்தினர்களே, அநேக வருடங்களுக்கு முன்னர் இந்தத் தூதன் தோன்றி, காரியங்களைக் காண்பித்தார். நான் அதைக் குறித்து சற்று சந்தேகப்படுகின்றவனாயிருந்தேன். பழங்காலத்தவர்களாகிய நீங்கள் எல்லோருமே அதை அறிவீர்கள். நீங்கள்…நீங்கள் கேள்விப்பட்டபோது, அதாவது அது உண்மையென்றால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். ஆம், பாருங்கள், சபையைப் பாருங்கள், அதே சமயத்தில் பழங்காலத்தவரைப் பாருங்கள். பார்த்தீர்களா? நான் சந்தேகப்படுகிறவனாயிருந்தேன், ஏனென்றால் அது பிசாசாயிருந்தது என்று பிரசங்கிமார்கள் என்னிடத்தில் கூறியிருந்தனர். நான் அதை அந்த விதமாக நம்பினேன். ஆனால் நான் காத்திருந்தேன். அதே சமயத்தில் நான் அதைக் குறித்து ஒன்றையுமே கூறவில்லை. 18 ஆனால், ஓ, கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! ஒர் இரவு அவர் ஒரு தூதனாக இறங்கி வந்து, அவரைக் குறித்திருந்த வேதவாக்கியங்களில் அதை வெளிப்படுத்தினார். நான் அதை வேதவாக்கியங்களில் கண்டபோது, அதன்பின்னர் அந்தச் செய்தியை உலகம் முழுவதும் முழக்கமிட்டேன். 19 அப்போதிலிருந்துதான் ஓரல் ராபட்ஸ், A.A.ஆலன், டாமி ஆர்ஸ்பர்ன், டாமி ஹிக்ஸ், இன்னும் அநேகர் புறப்பட்டு சென்றனர். பார்த்தீர்களா? இதுவோ ஜனங்களுக்கு ஒரு செய்தியாய் உள்ளது. 20 இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். வேதப்பிரகாரமாக அவர் மாறாதவராயிருக்கிறார். அவர் அதேக் காரியங்களைச் செய்கிறார். அவர் மாறாதவராயிருக்கிறார். அவர் அதையே மாறாமல் செய்கிறார். அவர் அதேவிதமாக தம்மை வெளிப்படுத்துகிறார். இந்தக் காலையில் அவர் இங்கே மாறாதவராய் இருக்கிறார். இப்பொழுது நாம் அவரைக் காணலாம், நாம் காணாமலுமிருக்கலாம். அது என்னவாயிருந்தாலும், அவர் இங்கிருக்கிறார் என்பதற்கு நாம் இப்பொழுது ஒரு சாட்சியை உடையவர்களாயிருக்கிறோம். 21 இப்பொழுது, பவுல் இந்த அனுபவத்தின் பேரில் இந்த நிருபங்களை, அவைகளில் பெரும்பாலானவற்றை சிறையிலிருந்து எழுதினான் என்பதை நாம் இப்பொழுது கண்டறிகிறோம். அவன் புதிய ஏற்பாட்டை பழைய ஏற்பாட்டுடன் ஒப்பிட்டு எழுதியிருந்தான். இப்பொழுது நினைவிருக்கட்டும், ஆவியின் ஏவுதலைக் கொண்ட இந்த வேதாகமத்தின் கடைசி எழுத்தாளனிடத்தில், தேவன் இறங்கி வந்து, “எந்த மனிதனாவது இதனோடு எதையாவது கூட்டினால், அல்லது இதிலிருந்து எதையாவது எடுத்துப் போட்டால் ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்துப் போடப்படும்” என்று கூறினார். ஆகையால் நாம் அதனோடு எதையுங் கூட்ட துணிச்சல் கொள்ளக் கூடாது. ஓ, அது இருக்கிற வண்ணமாக அது இருக்க வேண்டும். அதனோடு எதையும் கூட்டக் கூடாது. அதில் உள்ள ஒவ்வொரு காரியத்திற்காகவும் நாம் போராட வேண்டும். எனக்கு அதில் உள்ளதைக் காட்டிலும் அதிகமாக வேண்டாம், அதில் உள்ளதைவிட குறைவாகவும் எனக்கு வேண்டாம். அது கூறுகிற விதமாக எனக்கு வேண்டும். 22 இப்பொழுது, இந்த எபிரெய புத்தகம், நான் இதைத் தெரிந்துகொண்டதற்கு காரணம்; ஒரு நோக்கம், ஒரு காரியம்; இந்த நிருபம், “அருமை சகோதரன் பிரான்ஹாம்” என்பது போன்று உள்ளது. நான்-நான், நாம் வார்த்தையோடு தரித்திருக்க விரும்புகிறோம். 23 இப்பொழுது, முதலாம் அதிகாரம், இயேசுவை உயர்த்துகிறதாய் உள்ளது, எனவே அவரே முக்கியமான ஒருவராயிருக்கிறார். அன்றொரு இரவு, பவுல் மகத்தான துவக்கத்தில் அவர் இருந்ததை நாம் அறிந்துகொள்ளும்படிச் செய்தான். அவர் அந்த மகத்தான 7-ம் அதிகாரத்தில் உள்ள “மெல்கிசேதேக்கு, சாலேமின் இராஜா” என்பவரேயல்லாமல் வேறோருவரல்ல என்பதை நாம் கண்டறிகிறோம். 24 இப்பொழுது, இந்தக் காலையில், நாம் அவரை இதிலிருந்து மற்றொன்றிற்கு, மற்றொரு நிலைபாட்டில், 2-வது அதிகாரத்திலிருந்து அணுகுகிறோம். இப்பொழுது, “தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக் கடவர்கள் என்றார்” என்ற இந்த மகத்தான, ஆச்சரியமான செய்தியானது, இயேசுவை உயர்த்துகிறதைப் பற்றி நமக்குக் கூறின பிறகு, அது இங்கு பூமியைப் போன்று எவ்வளவு பழமையானது என்பதையும் நான் எண்ணிப் பார்க்கிறேன்: “ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்”. 25 2-ம் அதிகாரத்தில் 2-ம் வசனத்தில், “இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்” என்று உள்ளது என்று நான் நம்புகிறேன். பாருங்கள், “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்”. தீர்க்கதரிசிகள் என்னவாயிருந்தனர் என்றும், தேவன் தம்முடைய செய்தியை தீர்க்கதரிசிகள் மூலமாக எப்படி கொண்டு வந்தார் என்பதையும் நாம் கண்டறிந்தோம். “ஆனால் இந்தக் கடைசி நாட்களில் அவர் தம்முடைய குமாரன் மூலமாய், இயேசு மூலமாய் பரிசுத்த ஆவியினால் திருவுளம் பற்றினார். அப்பொழுது அவர் தீர்க்கதரிசிகள் மூலமாக திருவுளம் பற்றினார்”. அதன்பின்னர் அந்த எல்லாத் தீர்க்கதரிசிகளும் தங்களுக்குள் கிறிஸ்துவின் ஆவியை உடையவர்களாயிருந்தனர் என்பதை நாம் திரும்பவும் பார்த்து, கண்டறிந்தோம். 26 நாம் யோசேப்பினிடத்திற்கு திரும்பிச் சென்று, அவன் கிறிஸ்துவுக்கு பரிபூரண மாதிரியாயிருந்ததையும் கண்டறிந்தோம். பின்னர் மோசேயினிடத்திற்கு திரும்பிச் சென்று, அவன் கிறிஸ்துவுக்கு பரிபூரண மாதிரியாயிருந்தான் என்பதையும் கண்டறிந்தோம். அதன்பின்னர் நாம் தொடர்ந்து வந்து தாவீதும் கூட அவ்வாறிந்ததைக் கண்டோம். தாவீது எருசலேமில் புறக்கணிக்கப்பட்டதை, ஏன் என்று அறியாதவனாயிருந்தான். ஆனால் மலையின் மேலேச் சென்று, திரும்பிப் பார்த்து, ஒலிவ மலையின் மேலிருந்து எருசலேமைப் பார்த்து அழுதான், ஏனென்றால் அவன் புறக்கணிக்கப்பட்டிருந்தான். அப்போதிலிருந்து எண்ணூறு வருடங்கள் கழித்து எருசலேமிலே இராஜாவாகிய தாவீதின் குமாரன் புறக்கணிக்கப்பட்டபோது, அதே மலையின் மீது அமர்ந்து அழுதார். ஓ, கிறிஸ்துவின் ஆவி, தனிப்பட்ட நபர்களோடு இடைபடுதல்! 27 இப்பொழுது, பவுல் கூறத் துவங்குகிறான்; …ஆகையால் நாம் கேட்டவைகளை…அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும்… 28 இப்பொழுது, நாம் 2-ம் அதிகாரத்தை துவங்கிக்கொண்டிருக்கிறோம். ஆகையால் நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும். 29 ஓ, தேவன் அதை இந்தக் கூடாரத்தில் இந்தக் காலையில் பதியச் செய்வாராக. பரிசுத்த ஆவியானவர் அதை உங்கள் இருதயங்களுக்குள் மிக ஆழமாக பதியச் செய்யவேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். “நாம் கேட்டவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும்”. மகத்தான யேகோவா இறங்கி வந்து, அவர் செய்கிற காரியங்களை செய்கிறதை நாம் காணும்போது, அவைகளை வேதவாக்கியத்தைக் கொண்டு வேதவாக்கியத்தை ஒப்பிடுவதைக் காணும்போது, அவை சத்தியமாயிருப்பதை நாம் காணும்போதும், நாம் என்ன மாதிரியான ஜனங்களாய் இருக்க வேண்டும்? நாம் சில சமயங்களில் அவ்வளவு அக்கறையற்றவர்களாயிருந்துகொண்டு, ஒரு மரத்துண்டின் மேலுள்ள பாலுண்ணிகளைப் போல சுற்றி அமர்ந்திருக்கிறோம். நாம் ஒவ்வொரு நிமிடமும் ஜனங்களை கிறிஸ்துவிடம் கொண்டுவரும்படி முயற்சிக்க ஓய்வில்லாமல் செயல்படுகிறவர்களாய் இருக்க வேண்டும். நாம் ஜீவனுள்ள கற்களாய் இருக்க வேண்டும். நாம் இப்பொழுது இருக்கிறதுபோல ஒருபோதும் சோம்பலாய் இருக்கவே வேண்டாம். நாம் எல்லோரும் சபைக்குச் சென்று, கர்த்தராகிய இயேசு செய்கிற ஏதோ ஒன்றைக் காண்போம் அல்லது ஒரு குறிப்பிட்ட விதத்தில் அவர் நம்மை ஆசீர்வதிப்பதைக் காண்போம். அதன்பின்னர் நாம்—நாம் திரும்பிச் சென்று, “மிக அருமையான கூட்டம்” என்று கூறிவிடுவோம். 30 இப்பொழுது, வார்த்தையைக் குறித்த பிரசங்கத்தை நாம் கேட்டு மகிழ்கிறோம். ஆனால் அது முக்கியமான காரியம் அல்ல. அதுவல்ல. நாம் வழக்கமாக செய்கிறது போன்று, நாம் வார்த்தையைப் பிரசங்கிக்க கேட்கும்போது மாத்திரம் ஆராதிக்காமல் எப்பொழுதும் அவரை ஆராதிக்க வேண்டும். அது அற்புதமானதுதான். ஆனால் நாம் நம்முடைய ஜீவியத்தின் ஒவ்வொரு மணி நேரமும் அவரை தொழுதுகொள்ளவேண்டும். நாம் பணியிலிருக்கும்போது, நாம் அவரை தொழுதுகொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் தக்க தருணம் கிடைக்கும்பொழுது அவரைக் குறித்து சாட்சி பகருவதன் மூலம் கர்த்தரை ஆராதிக்கிறோம். பெண்மணிகளாகிய உங்களில் சிலர், ஒரு ஸ்திரீ தவறாயிருப்பதை நீங்கள் காண்பீர்களேயானால், அப்பொழுது நீங்கள் அவளை அழைத்துச் சென்று, “சகோதரியே, இதைப் பார்க்கிலும் ஒரு மேலான ஜீவியம் உண்டு” என்று கூறுவதன் மூலம் கர்த்தரை ஆராதிக்கிறீர்கள். 31 புருஷர்களாகிய நீங்கள் உங்களுடைய பணியிலிருக்கும்போது, ஒரு மனிதன் கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குவதை நீங்கள் கேட்கும்போது, அப்பொழுது ஒரு பக்கமாக நழுவிச் சென்று, அவனை கரம் பிடித்து அழைத்துச் சென்று, “உனக்கு இதைப் பார்க்கிலும் ஒரு மேலான ஜீவியம் ஒன்று உண்டு. என்வே நீ அந்த வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது” என்று கூறுங்கள். அவனிடத்தில் ஒரு சாந்தமான, பெருந்தன்மையான முறையில் சொல்லுங்கள். அந்த எல்லாக் காரியங்களுமே ஒரு ஆராதனையாக உள்ளது. யாரோ ஒருவர் சுகவீனமாயிருப்பதை நாம் காணும்போது, இனி ஒன்றுமே செய்யப்பட முடியாது என்று மருத்துவர் கூறும் போது, அப்பொழுது நாம், “ஜெபத்திற்கு பதிலளிக்கிற பரலோகத்தின தேவன் ஒருவர் உண்டு” என்று அவர்களிடம் கூறுவதன் மூலம் கர்த்தரை ஆராதிக்க வேண்டும். 32 ஆகையால் அந்தக் காரியங்கள் சம்பவிக்கிறதை நாம் காணும்போது, கூடுமானவரை இந்தக் காரியங்கள் சம்பவிக்கிறதை நாம் காணும்போது, நாம் இந்தக் காரியங்கள் நழுவிச் செல்ல அனுமதிக்க வேண்டாம். நாமோ அது நம்முடைய விரல்களைவிட்டே நழுவிச் சென்றுவிட அனுமதிக்கிறோம். அதுதான் இன்றைய மகத்தான பெந்தேகோஸ்தே சபையோடுள்ள காரியமாய் உள்ளது. அவர்கள் மிகச் சிறந்த காரியத்தை அவர்களுடையக் கரங்களில் கொண்டிருந்தபோது, அது அவர்களுடைய விரல்களினூடாக நழுவிச் செல்ல அனுமதித்துவிட்டனர். ஆனால் அவர்களும் என்ன செய்தனர் என்பதை நோக்கிப் பாருங்கள். அவர்களும் மற்ற சபைகளைப் போலவே செய்தனர். “இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்தில் விரைந்தோடி, கோரா எதிர்த்துப் பேசின பாவத்திற்குள்ளாகி கெட்டுப்போனார்கள்.” 33 அவர்கள் ஸ்தாபனமுண்டாக்கிக் கொண்டனர். நாம் யாவரும் ஒன்றாயிருக்கக் கூடிய சகோதரத்துவத்திற்குப் பதிலாக அவர்கள் தங்களுக்கு ஸ்தாபனமுண்டாக்கிக் கொண்டனர். சிறு ஸ்தாபனங்களும், வேற்றுமையான உபதேசங்களும் எழுப்பப்பட்டு, சகோதரத்துவத்தை முறித்துப் போட்டன. நீங்கள் கவனிக்கவில்லையென்றால், பாப்டிஸ்டுகளும், பிரஸ்பிடேரியன்களும் இதை அறிந்து கொள்ளப் போகிறார்கள், ஏனென்றால், “தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்.” நாம் ஒருங்கிணைக்கப்படாதக் காரணத்தால் அது கரங்களிலிருந்து நழுவிச் செல்ல விட்டுவிட்டோம். 34 இந்தியர்கள் வெள்ளைக்காரர்களிடம் இந்த நாட்டை எப்படி பறிகொடுத்தனர்? அவர்கள் ஒருங்கிணைக்கப்படாத காரணத்தினாலேயாகும். அவர்கள் ஒரு பெரிய அணியாய்…முன்னால்…ஆனால் அவர்கள் ஒருவருக்குள்ளே ஒருவர் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்திருந்தால், அவர்கள் தங்களுடைய நிலத்தை கைவிடாமல் பற்றிகொண்டிருந்திருப்பார்கள். 35 நாம் எப்படி அதை இழக்கப் போகிறோம்? ஏனென்றால் நாம் ஒருங்கிணைக்கப்படாமலிருக்கிறோம். நாம் எப்படி தேவனோடு உள்ள அனுபவத்தை இழக்கிறோமென்றால், நாம் ஒருங்கிணைக்கப்படாமலிருக்கிற காரணத்தினாலேயாம். நாம் ஒன்றை அமைத்து, இதை மெத்தோடிஸ்டு, இதை பாப்டிஸ்டு, இதை அசெம்பளீஸ், இதை ஒருத்துவம், இதை வேறேதோ ஒன்று என்றும், தேவனுடைய சபை என்றும், நசரேயன் என்றும், யாத்திரீகப் பரிசுத்தர் என்றும் அழைக்கிறோம். நாம் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒருங்கிணைப்பில்லாமல் இருக்கிறோம். நாம் ஒருபோதும் பிரிந்திருக்கவேக் கூடாது. நாம் எண்ணத்தில் வேறுபடலாம், ஆனால் நாம் மனமார சகோதரர்களாயிருப்போமாக. நாம் அவ்வாறு இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அவர் முழு தேவனுடைய சபைக்காகவும் மரித்தார். நாம் ஒருங்கிணைக்கப்படாமலிருக்க விரும்புகிறதில்லை. …ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும். …ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு… 36 நீங்கள் அதைக் கேட்டீர்களா? “தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு…” இப்பொழுது தூதன் என்பவர் “செய்தியாளனாயிருக்கிறார்”. தூதன் என்ற வார்த்தை “செய்தியாளன்” என்பதை பொருட்படுத்துகிறது. இங்கே புத்தகத்தின் முதலாம் அதிகாரத்தினூடாகப் பார்க்கையில், “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்” என்று உள்ளது. அவர்கள் தேவனுடைய செய்தியாளர்களாயிருந்தனர். அவர்கள் தேவனுடைய செய்தியாளர்களாயிருந்தனர். அவர்கள்—அவர்கள் தேவனுடைய தூதர்களாயிருந்தனர். ஒரு செய்தியாளன் ஒரு தூதனாயிருக்கிறான்; இல்லையென்றால் சரியாகக் கூறினால் தூதன் செய்தியாளனாயிருக்கிறான். 37 ஒரு செய்தியாளன்! நீங்கள் இந்தக் காலையில், ஒரு செய்தியாளனாயிருக்கீறீர்கள். நீங்கள்…நீங்கள் நற்செய்தியைக் குறித்த ஒரு செய்தியாளனாயிருக்கிறீர்கள் அல்லது துர்செய்தியைக் குறித்த ஒரு செய்தியாளனாயிருக்கிறீர்கள். ஓ, நாம் இராஜ்ஜியத்தின் தூதுவர்களாய், அதாவது நாம் தூதர்களாய், உயிர்த்தெழுதலின் செய்தியாளர்களாயிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வது அழகாயிருக்கிறதல்லவா? நாம் இந்தப் பாவ உலகத்தில் கிறிஸ்து ஜீவிக்கிறார் என்பதற்கு தேவனுடைய் செய்தியாளர்களாயிருக்கிறோம். நம்முடைய இருதயங்களில் அவர் ஜீவிக்கிறார், நம்முடைய ஆவியில் அவர் ஜீவிக்கிறார். அவர் இழிவான ஒழுக்கக்கேடான பாவ வாழ்க்கையிலிருந்து நம்மை கொண்டு வந்து, நம்மை உயர்த்தி, நமக்கு ஒரு “அல்லேலூயாவை” நம்முடைய ஆத்துமாக்களில் அளித்து, நம்மை புது சிருஷ்டிகளாக்குகிறார். நாம் செய்தியாளர்களாய், உடன்படிக்கையின் தூதர்களாயிருக்கிறோம். எவ்வளவு அற்புதமாயுள்ளது! 38 இப்பொழுது, பழைய ஏற்பாட்டில், “தேவதூதர் மூலமாய் சொல்லப்பட்ட வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க,” அந்தவிதமாக அது சரியாக இருக்க வேண்டியதாயிருந்தது. பழைய ஏற்பாட்டில் ஒரு தீர்க்கதரிசியினுடைய வார்த்தை வெளிப்படுவதற்கு முன்னர், அது பரிசோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட வேண்டியதாயிருந்தது. இன்றைக்கு நாம் இருப்பது போன்று அவர்கள் அதைக் கொண்டு உறுதியற்றுவிடவில்லை. 39 அப்படியே வெளியே போய், ஒரு விதமான உணர்ச்சிவசப்படுதலைப் பெற்று, அல்லது வேறெந்தக் காரியத்தையாவது ஏற்றுக்கொண்டு, “ஓ, தேவனுக்கு மகிமை, அதுதான் அது!” என்று கூறும்போது, நீங்கள் தவறாயிருக்கிறீர்கள். வேதம், “கடைசி நாட்களில், பிசாசு கிறிஸ்தவ மார்க்கத்தை பாவனை செய்வான் என்றும், கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அவ்வளவு நெருக்கமாயிருப்பான்” என்றும் கூறியுள்ளது. அது உண்மை. ஆகையால் நாம் அதை சோதித்துப் பார்க்க வேண்டும். 40 அவர்கள் அதை தங்களுடைய நாளில் எப்படி சோதித்துப் பார்த்தனர்? ஊரீம் தும்மீம்மண்டைக்குச் சென்றே. ஆரோனின் மார்ப்பதகத்தில் மாணிக்கம், பதுமராகம், வச்சிரம், முத்து, இந்திரநீலம் போன்ற அந்தக் கற்கள் இருந்தன. ஆரோனின் மார்ப்பதக்கத்தில் இருந்த அந்தக் கற்கள் யாவும் இந்தப் பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களின் பிறப்பைச் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தபோது, அதின் மேலிருந்து அந்தப் புனிதமான ஒளி எழும்பிப் பிரகாசித்திருந்தால், அப்பொழுது தேவன், “அது சத்தியம்” என்று கூறியிருந்தார். ஆனால், அது எவ்வளவுதான் உண்மையாக தென்பட்டாலும் கவலைப்பட வேண்டாம், அதன் மேல் வெளிச்சம் பிரகாசிக்கவில்லையென்றால், அது சத்தியமாயிருக்கவில்லை. ஆகையால் அந்த ஊரீம் தும்மீம் அந்த ஆசாரியத்துவத்தோடு சென்றுவிட்டது. 41 ஆனால் இந்த வேதமே இன்றைக்கு தேவனுடைய ஊரீம் தும்மீமாக உள்ளது. ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைக்கிறபொழுது, அது வேதாகமத்தோடு முற்றிலுமாய் பிரகாசிக்க வேண்டும். அப்பொழுது, தேவன் இறங்கி வந்து அதை நிரூபிக்கிறார் என்று அவர் கூறுகிறார். 42 ஓ, இன்றைக்கு எப்படி என்னால் தேவனை மகிமைப்படுத்த முடியும்! நான் இந்தக் கூடாரத்தைவிட்டு சென்று கொண்டிருந்தபோது, இதைக் குறித்து மற்றொரு ஞாயிற்றுக் கிழமை இந்தவிதமாக நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஜனங்களாகிய நீங்கள் அழுதுகொண்டு, என்னைப் போக வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருந்தீர்கள். ஆனால் நான் தாவீதும் கோலியாத்தும் என்பதன் பேரில் பிரசங்கித்தபோது, அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று கூறுகிற இந்தக் குளிர்ந்துபோன அலட்சியமான உலகத்தை எப்படி நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள் என்று பிரசங்கித்தேன். 43 நான், “ஒரு பெரிய இராட்சதன் இருக்கிறான், நாம் அவனைக் கொன்றவுடனே, மற்றவர்கள் தைரியமடைந்துவிடுவார்கள்” என்றேன். கர்த்தர் அதை அருளினார். அதன்பின்னர் ஓரல் ராபர்ட்ஸ் மற்றும் ஜேக்கர்ஸ் போன்றவர்கள் பட்டயத்தை உருவி, நாம் சத்துருவோடு போரிட்டு, தேசத்தை விட்டு துரத்தி, அவர்களுடைய வாய்களை அடைத்துப் போடுவோம் என்று கூறினர். எனவே அற்புதங்கள் நிகழ்கிறதில்லை என்று அவர்கள் கூற முடியவில்லை, ஏனென்றால் இங்கேயே அவைகள் நிகழ்ந்தன. நிச்சயமாகவே. தேவனுடைய வார்த்தை நித்தியமானதாயிருக்கிறது. அது ஊரீமின் மேல் பிரகாசித்தது. வார்த்தையின் மேல் பிரகாசித்தது, அதுவே அவருடைய ஊரீம் தும்மீமாயுள்ளது. அது அதன் மேல் பிரகாசித்தபோது, அது உறுதியானதாயிருந்தது. தேவையுள்ள எவருமே, நீங்கள் ஒரு பாவியாயிருந்தால், நீங்கள் எப்படி இரட்சிக்கப்பட வேண்டும் என்று அறிந்துகொள்ள விரும்பினால், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசமாயிருங்கள்”. 44 இன்றைக்கு நீங்கள் செய்ய வேண்டிய அநேகக் காரியங்களை நாம் உடையவர்களாயிருக்கிறோம். “புது வாழ்க்கையைத் துவங்க வேண்டும். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு நீங்கள் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும்” என்கிறோம். நான் பிலிப்பு பட்டணத்து சிறைச்சாலைக்காரனைக் குறித்து நினைத்துப் பார்க்கிறேன். இந்த சிறைச்சாலைக்காரன் பவுலினிடத்தில், “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருந்தால், அவன் செய்யக் கூடாத காரியங்களை நாம் அவனுக்கு கூறியிருந்திருப்போம். “நீ குடிப்பதை விட்டுவிட வேண்டும். நீ சூதாடுவதை விட்டுவிட வேண்டும், உன்னுடைய சூதாட்டத்தை விட்டுவிட வேண்டும். நீ இதை விட்டு விட வேண்டும். நீ அதை விட்டுவிட வேண்டும்” என்று கூறியிருப்போம். பவுல் அவனிடத்தில் அதைக் குறித்து கூறவேயில்லை. அவன் செய்ய வேண்டிய காரியங்களையே பவுல் அவனுக்கு கூறினான். “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்” என்றான். 45 இப்பொழுது, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு”. அதுவே ஊரீம் தும்மீம் பிரகாசித்தலாகும், பரிசுத்த யோவான் 5.24. “நானே உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர்”. யாக்கோபு 5:14-ல் “மூப்பர்களை வரவழைத்து, எண்ணெய் பூசி ஜெபியுங்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்” என்று உள்ளது. ஊரீம் தும்மீம் பிரகாசித்தல். புரிகிறதா? அதுவே தேவனுடைய நித்திய வார்த்தையாயுள்ளது. 46 எத்தனை நாத்திகர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர், கடவுளை புரிந்துகொள்ளவே முடியாது என்று நம்புவர், சந்தேகக்காரர்கள் எழும்பினாலும் எனக்கு கவலையில்லை. தேவன் தம்முடைய வார்த்தைக்காக நிற்பார். அவர் அதை செய்வதாக வாக்குப்பண்ணினார். 47 “ஆகையால் நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும். ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனம் (தீர்க்கதரிசிகள்) உறுதிபடுத்தப்பட்டிருக்க…” அவைகள் அவ்வாறு இருந்தனவா? நாம் இதன் பேரில் ஒரு வாரம் செலவழிக்கக் கூடும். 48 மோசே பேசினபோது, அது உறுதிப்படுத்தப்பட்டிருந்ததா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அது நிச்சயமாக உறுதிபடுத்தப்பட்டிருந்தது. மலையின் உச்சியின் மேல் உட்கார்ந்துகொண்டிருந்த எலியாவைக் குறித்து எப்படியிருந்தது? கர்த்தர் அவனிடத்தில், “எலியாவே, அங்கே எழுந்து போ. நான் அங்கே உன்னோடு தரித்திருந்து ஐக்கியங்கொள்ள விரும்புகிறேன்” என்றார். தேவன் தம்முடைய ஜனங்களோடு ஐக்கியங்கொள்ள விரும்புகிறார். ஆனால் அவர் நம்மோடு ஐக்கியங்கொள்ள நாம் அவருக்காக போதுமான நேரம் நிற்கமாட்டோம். நாம் மிகவும் துரிதமாக ஓய்வின்றி ஒர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தாண்டிச் சென்று கொண்டேயிருக்கிறோம். “எலியாவே, அங்கே அப்படியே இரு”. அவர் மூன்றரை வருடம் ஐக்கியங்கொள்ள விரும்பினார். நம்மால் அவருக்கு மூன்று நிமிடங்கள் அளிக்க முடியவில்லை. மூன்றரை வருட கால தொடர் ஐக்கியம். ஓ, நான் அதை நேசிக்கிறேன்! அவர், “சமைப்பதைக் குறித்து கவலைப்படாதே. நான் அதை ஏற்கெனவே ஆயத்தம் செய்து விட்டேன். காகங்கள் உன்னைப் போஷிக்கப் போகின்றன. ஒவ்வொரு காரியமும் சரியாயிருக்கப் போகிறது. நான் ஐக்கியங்கொள்ள விரும்புகிறேன்” என்றார். இந்த வயோதிக தீர்க்கதரிசியான எலியா மலையின் மேல் தங்கியிருந்து, தேவனோடு ஐக்கியங் கொண்டிருந்தபோது, ஏன், அந்தத் தலைவன், “நான் மேலே போய் அவனை அழைத்துக்கொண்டு செல்வேன் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினான். இப்பொழுது, நீங்கள் ஒருபோதும் அந்த ஐக்கியத்தை முறிக்க முயற்சிக்காதீர்கள். 49 ஆகையால், அந்தத் தலைவன் தன்னுடைய பெரிய சேனையிலிருந்த ஐம்பது பேருடன் வந்தான். எனவே அவன், “எலியாவே, நான் உன்னை அழைத்து கொண்டுபோக வருகிறேன்” என்றான். 50 அப்பொழுது எலியா எழும்பி நின்றான். கர்த்தருடைய தீர்க்கதரிசியை இங்கே கவனியுங்கள்! அவன், “நான் ஒரு கர்த்தருடைய ஊழியக்காரனாயிருந்தால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி உங்களைப் பட்சிக்கட்டும்” என்றான். உடனே அக்கினி இறங்கி வந்தது. அந்த தலைவன் கூறினான்… 51 “ஓ, என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” சரியாகக் கூறினால், “அநேகமாக ஒரு—ஒரு இடிமுழக்கம் உண்டாகி, மின்னல் அவர்கள் மேல் அடித்து, அவர்களை கொன்றுபோட்டிருக்கலாம். எனவே நான் மற்றொரு ஜம்பது பேரை அனுப்பப் போகிறேன்” என்று அந்த இராஜா கூறினான். 52 எலியா எழும்பி நின்றான், தூதர்களில் ஒருவன். அவருடைய வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தவறாக செய்யப்பட்டிருந்த ஒவ்வொரு காரியத்திற்கும் அவன் நீதியான தண்டனையை வரவழைக்க வேண்டியதாயிருந்தது. எனவே எலியா, “நான் ஒரு கர்த்தருடைய ஊழிக்காரனாயிருந்தால், அக்கினி வந்திறங்கட்டும்” என்றான். இரண்டாவது முறையாக அது ஐம்பது பேரை பட்சித்துப் போட்டது. சரி. ஒவ்வொன்றிக்கும் நீதியான தண்டனை. …ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிபடுத்தப்பட்டிருக்க… 53 இப்பொழுது, இங்கே மகத்தான காரியம் உள்ளது, அடுத்த வசனம். …எப்படி தப்பித்துக் கொள்வோம்? 54 “நாம் எப்படி தப்பித்துக் கொள்வோம்?” எலியா கர்த்தருடைய தூதனாயிருந்த காரணத்தால், அவனுடைய சத்தம் அழிவை கொண்டுவந்திருக்குமேயானால், கிறிஸ்துவினுடைய சத்தம் பேசும்போது நாம் எப்படி தப்பித்துக்கொள்வோம்? இல்லையென்றால், உங்களுக்கு ஜெபிக்கப்படும்போது, அது கிறிஸ்துவின் சத்தமாயிருந்தால், நாம் எப்படி தவறிப் போக முடியும்? வியாதியஸ்தருக்காக ஜெபிக்க கிறிஸ்துவானவர் தம்முடைய சபையை நியமித்திருப்பாரேயானால், அவர்கள் செய்யும்படி…அவர் கூறுகிறதை சபை செய்யுமேயானால், அப்பொழுது அது எப்படி தவறிப்போக முடியும்? அது தவறிப்போக முடியாது. நீங்கள் தவறிப்போக முடியும், ஆனால் அது தவறிப் போக முடியாது. நீங்கள் அதை கைக்கொள்ளும் வரை, அது உங்களை அதனூடாகக் கொண்டு செல்லும். 55 நீங்கள் தவறிப் போவீர்களேயானால், நீங்கள் உங்களைக் கொண்டே தவறிப் போவீர்கள். நீங்கள் வார்த்தையிலிருந்து விலகிச் செல்கிறீர்கள். ஆனால் நீங்கள் வார்த்தையோடு தரித்திருக்கும்வரை, அது தவறிப்போக முடியாது. தீர்க்கதரிசிகளின் வார்த்தையே இன்னின்னதை செய்ததானால், கிறிஸ்துவின் வார்த்தை இன்னும் எவ்வளவு அதிகமாகக் கிரியைச் செய்யும்? …முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்…இவ்வளவுப் பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வோம்? 56 கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டதைக் குறித்து, சிந்தித்துப் பாருங்கள். எத்தனை முறை நாம் திரும்பி போக முடியும்? நாம் இங்கே ஒரு மணி நேரமாக, எங்கே நிற்கக் கூடும்? இயேசு வந்தபோது, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருந்தார். 57 இப்பொழுது, முதலாவது இயேசுவானவர் மூலமாய்த் தாமே அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டது என்பது நினைவிருக்கட்டும். இப்பொழுது அவருக்கு செவிகொடுங்கள். 58 அவர் பூமிக்கு வந்தபோது, அவர் தம்மை ஒரு சுகமளிப்பவராக உரிமை கோரவில்லை. பரிசுத்த யோவான் 5:19-ல், அவர், “இந்தக் கிரியைகளைச் செய்கிறது நானல்ல. என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்” என்றார். 59 பிலிப்பு அவரிடத்தில் வந்ததைக் குறித்து கவனியுங்கள். நாத்தான்வேல்…பிலிப்புவினுடைய மனமாற்றத்திற்குப் பிறகு, அவன் புறப்பட்டு நாத்தான்வேலிடம் சென்றான். அவன் நாத்தான்வேலினிடத்தில், “யோசேப்பின் குமாரனும், நாசரேத்தூரானுமாகிய இயேசுவை நாங்கள் கண்டோம். வந்து பார்” என்றான். 60 அதற்கு நாத்தான்வேல், “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமா?” என்று கேட்டான். 61 அதற்கு பிலிப்பு, “வந்து பார்” என்றார். அந்தவிதமாகத் தான் அது உறுதியாக்கப்பட வேண்டியதாயிருந்தது; நீரூபிக்கப்பட வேண்டியதாயிருந்தது. வந்து பார். ஓ, நான் கேட்டிருந்ததிலேயே மிகச் சிறந்தது அதுவேயாகும். வந்து, உனக்காக நீயே கண்டறிந்து கொள். ஒரு பக்கமாக வரிசையில் நின்று குறை கூறாதே. ஆனால் “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.” வந்து பார். 62 அவர்கள் வீதியினூடாக பேசிக்கொண்டே சென்றனர். நாத்தான்வேல் கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்திற்குள்ளாக நடந்து சென்றபோது, அவர், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். 63 அது கிட்டதட்ட அவனை முழுவதுமாக அதிர்ச்சியடையச் செய்துவிட்டது. அப்பொழுது அவன் சுற்றும் முற்றும் பார்த்து, “ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர்? நீர் என்னை ஒருபோதும் கண்டதில்லையே. நீர் என்னை எப்படி அறிவீர்?” என்று கேட்டான். பிலிப்பு…கூறினான்… 64 அதற்கு அவர், “அவன் உன்னை அழைக்கிறதற்கு முன்னே…,” “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே நேற்று நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்” என்று கூறினார். ஆமென். 65 அதற்கு நாத்தான்வேல், “நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்றான். 66 ஒரு ஸ்திரீ அவருடைய பிரசன்னத்திற்குள்ளாக நடந்து சென்றாள். அப்பொழுது அவர், “நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டுவா” என்றார். அதற்கு அந்த ஸ்திரீ, “எனக்குப் புருஷன் இல்லை” என்றாள். 67 அப்பொழுது அவர், “அது சரிதான். ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல. நீ உண்மையைச் சொன்னாய்” என்றார். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். 68 அப்பொழுது அவள், “ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும்போது, அவர் எங்களுக்கு எல்லாக் காரியங்களையும் அறிவிப்பார் என்பதை நாங்கள் அறிவோம்” என்றாள். 69 அதற்கு அவர், “உன்னுடன் பேசுகிற நானே அவர்” என்றார். 70 அப்பொழுது அவள் ஊருக்குள்ளே ஓடி, அந்த ஊர் ஜனங்களிடத்தில், “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அது மேசியாதானோ?” என்று கூறினாள். அது கர்த்தரால் உரைக்கப்பட்டது. 71 என்ன சம்பவித்தது? இயேசு இவ்வுலகிலிருந்து புறப்பட்டுச் செல்லும் முன்னர், “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள். அது சரியா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் அதிகமான கிரியைகளைச் செய்வீர்கள்” என்றார். ஓ, அவர்கள் எங்கும் புறப்பட்டுச் சென்றதை என்னால் காண முடிகிறது. மாற்கு 16-ல், “அவர்கள் புறப்பட்டுப்போய் எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, வசனத்தை உறுதிபடுத்தினார்” என்று உள்ளது. இங்கே பவுலும் அதேக் காரியத்தைக் கூறுகிறான். சுவிசேஷம் இயேசுவினாலே பிரசங்கிக்கத் துவங்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டது. அதுவே அஸ்திபாரக் கல்லாய் உள்ளது. ஓ, கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! அதுவே அஸ்திபாரக் கல்லாகும். 72 இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டிருப்பதைச் சிந்தித்துப் பாருங்கள். நாத்திகர்கள் எழுப்பியுள்ளனர், சமய நம்பிக்கையற்றவர்கள், சந்தேகக்காரர்கள், மற்றும் கடவுளை என்றுமே முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என நம்புகிறவர்கள் எழும்பியுள்ளனர். ஆனால், இன்றைக்கு, அவரிடத்தில் கேட்டவர்களாலே உறுதியாக்கப்பட்ட அதே பாணியில் அதே மாறாத இயேசுவானவர் தம்முடைய வார்த்தையை உறுதிபடுத்துகிறார். “அவருக்கு செவிகொடுங்கள்,” என்பது வெறுமென ஒரு பிரசங்கத்தை கேளுங்கள் என்பதை அது பொருட்படுத்துகிறதில்லை. அதன் பொருள் அவருக்கு செவிகொடுங்கள் என்பதாகும். ஆம். 73 நாம் எப்படி தப்பித்துக்கொள்வோம்? நம்முடைய தப்பித்துக் கொள்ளுதல் எங்கே? ஓ, நீங்களோ, “தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் மெத்தோடிஸ்டு சபையைச் சேர்ந்தவன். நான் ஒரு பிரஸ்பிடேரியன். நான் ஒரு பெந்தேகோஸ்தேக்காரன்” என்று கூறலாம். அதற்கும் இதனோடுள்ள காரியத்துக்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது. நீங்கள் ஒரு பக்கமாக நழுவிச் சென்று நின்றுகொண்டு, இதை, “மரித்தோரின் ஆவியோடு தொடர்புகொள்ளுதல் அல்லது ஒரு விதமான மனோத்தத்துவம் அல்லது ஒரு பிசாசு அல்லது வேறெதோ ஒன்று” என்று அழைக்க விரும்பலாம். அப்படிக் கூறுபவர்களாகிய அவர்களுக்கு அவமானம்! 74 “தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் உறுதிப்படுத்தப்பட்டிருக்குமேயானால்…” இயேசு, “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், எனென்றால் நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன்” என்றார். அவர் இறங்கி வந்து, தம்முடைய வார்த்தையை தொடர்ந்து உறுதிப்படுத்துவதை நாம் காணும்போது, நாம் ஏதோ ஒரு சபைக்கு, அல்லது ஏதோ ஒரு ஸ்தாபன அமைப்பிற்கு அல்லது ஸ்தாபனத்திற்கு அல்லது, நமக்கு பிரியமான ஏதோ ஒரு சிறிய நம்முடைய வேத சாஸ்திரத்திற்கு உதவி செய்வோமேயானால், நாம் எப்படி தப்பித்துக் கொள்வோம்? நீங்கள் அவ்வாறு செய்வதை விட்டுவிடுவது மேலானது. “ஏனெனில் தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான ஒவ்வொரு பாவத்திற்கும் நீதியான தண்டனையைப் பெற்றிருக்க, பரலோகத்திலிருந்து பேசி, தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்துகிற தேவகுமாரனுக்கு விரோதமான எந்த செய்கைக்கும் இன்னும் எவ்வளவு அதிகமாக தண்டனை கிடைக்கும். இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் நாம் தண்டனைக்கு எப்படி தப்பித்துக்கொள்வோம்?” ஓ, என்னே! “தேவனும் கூட…” 4-வது வசனம்: …தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற… 75 இதைக் கவனியுங்கள். கர்த்தர் சாட்சிகளைக் கொடுத்தார். ஓ, நான் அதற்காக மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்! கர்த்தர் சாட்சி கொடுத்தார். 76 பாருங்கள். எலியா மலையின் மேல் இருந்தபோது, அவன், “நான் ஒரு தேவனுடைய மனிதனாயிருந்தால், வானத்திலிருந்து அக்கினி விழுந்து உங்களை பட்சிக்கக்கடவது” என்றார். அவன் ஒரு தேவனுடைய மனிதனாயிருந்தான் என்று தேவன் சாட்சி கொடுத்தார். தேவன் எப்பொழுதுமே சாட்சி கொடுக்கிறார். உங்களுடைய வாழ்க்கை சாட்சி கொடுக்கும். உங்களுடைய சாட்சி என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் உங்களுடைய சத்தம் கேட்கப்படாதபடிக்கு உங்களுடைய ஜீவியம் உரக்கப் பேசுகிறது. ஆனால் உங்களுடைய ஜீவியம், நீங்கள் யார் என்பதை உங்களுடைய அனுதின ஜீவியம் சாட்சி பகரும். தேவன் சாட்சி பகருகிறார். ஆம். பரிசுத்த ஆவி ஒரு முத்திரையாயிருக்கிறது. ஒரு முத்திரை காகிதத்தின் இருபக்கங்களுக்கும் தேவையாயிருக்கிறது. நீங்கள் இங்கே நிற்பதை அவர்கள் காண்கிறார்கள். நீங்கள் வெளியே செல்லும்போதும் அவர்கள் உங்களைக் காண்கிறார்கள். சபையில் மாத்திரமல்லாமல், அனுதின பணியிலும் காண்கிறார்கள். நீங்கள் உள்ளும், புறமும் இருபக்கங்களிலும் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் பெற்றுள்ள சந்தோஷத்தினால், நீங்கள் ஜீவிக்கிற ஜீவியத்தினால் நீங்கள் உள்ளும் புறமும் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள். அதாவது நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் ஜீவிக்கிற ஜீவியத்தின் மூலமாகவே நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உலகம் அறிந்து கொள்ளுகிறது. எனென்றால் தேவன் சாட்சி கொடுக்கிறார். அவருடைய பரிசுத்த நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! என்னே, நான் பக்திப் பரவசமடைகிறேன். 77 அங்குள்ள சகோதரர்களே, அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். ஓ! “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; அவைகள் அந்நியனுக்குப் பின் செல்லாது.” ஓ, எப்படியாய் நம்முடைய பெயர்கள் அவருடைய உள்ளங்கைகளில் இருக்கின்றன! அது அவருக்கு முன்பாக இரவும் பகலும் இருக்கிறது. அவருடைய வார்த்தையானது, அவருடைய வாக்குத்தத்தமானது அவருக்கு முன்பாக எப்பொழுதும் இருக்கிறது. அவரால் அதை மறக்க முடியாது. அவர் உங்களை நேசிக்கிறார். 78 இப்பொழுது, அவர் தமக்குச் சொந்தமானவர்களைக் குறித்து சாட்சி கொடுப்பார். நீங்கள் உங்களுடைய வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் கூற வேண்டியதில்லை, உங்களுக்கு ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது என்பதை உலகம் அறிந்துகொள்ளும். …அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து கொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும்… 79 இப்பொழுது முடிப்பதற்கு முன்பாக நாம் இன்னும் ஒரு வேதவாக்கியத்தை எடுத்துக்கொள்வோம்; பெந்தேகோஸ்தே நாளில் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் ஏறக்குறைய நான்கு நாட்கள் கழித்து பேதுருவும் யோவானும் அலங்கார வாசல் என்றழைக்கப்பட்ட தேவாலய வாசலினூடாகக் கடந்து சென்றனர். அப்பொழுது அவர்கள் ஒரு மனிதனிடத்தில் “எங்களை நோக்கிப் பார்” என்றார்கள். அப்பொழுது பேதுரு, “வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, நீ எழுந்து நட” என்றான். அந்த மனிதன் அவர்களை நோக்கிப் பார்த்து, அதைக் குறித்து எந்த கேள்வியும் கேட்கவேயில்லை. அவன் எழும்பி நின்று நடந்து சென்றான். அவர்கள் படிப்பறியாதவர்களும், பேதைமையுள்ளவர்களுமாயிருந்தனர். ஆனால் வேதம், “ஜனங்கள் அவர்களுக்கு செவிகொடுக்க வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அவர்கள் இயேசுவோடிருந்தனர் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்” என்று உரைத்துள்ளது. 80 சகோதரனே, உங்களால் இந்தத் தற்போதைய உலகில், இந்த அந்தகாரத்தில் கலப்படமற்ற அப்படிப்பட்ட ஒரு ஜீவியம் ஜீவிக்க முடிகின்றபோதே, நீங்கள் இயேசுவோடு இருந்தீர்கள் என்பதை உலகம் அறிந்துகொள்கிறது. அப்பொழுது நீங்கள் இயேசுவோடு இருந்தீர்கள் என்பதை உலகத்தால் அறிந்துகொள்ளவும், காணவும் முடிகிறது. ஒரு கரடுமுரடான, வயோதிக இழிவான தெரு விபச்சாரி ஒரு பெண்மணியாக மாறமுடிந்து, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் கழுவப்படும்போது, தேவன் ஜீவிக்கிறார் என்று அவர் சாட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். 81 ஒரு குடிகாரனை எடுத்து கொள்வோம். அவன் மிகவும் கீழ்த்தரமாக நடந்து தன்னுடைய மனைவியைவிட்டு ஓடி, தன்னுடையப் பிள்ளைகளைத் தவறாக நடத்தி, ஒரு விபச்சாரிக்கு கொடுக்க அவர்களுடைய பணத்தை எடுத்து செலவழிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் ஒரு முறை இயேசுவை சென்றடையட்டும். அப்பொழுது தன்னுடைய சரியான சிந்தனைக்கு திரும்பி, ஆடையுடுத்திக்கொண்ட லேகியோனைப் போல தன்னுடையக் குழந்தைகளிடத்திற்கும், தன்னுடைய மனைவியினிடத்திற்கும், தன்னுடைய அன்பானவர்களிடத்திற்கும் அவன் திரும்பி வருவதை நீங்கள் காண்பீர்கள். நிச்சயமாக. 82 சில காலத்திற்கு முன்னர், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், உலகிலுள்ள மத சம்மந்தமானவர்கள் சந்தித்துக்கொண்டபோது, பல்வேறுபட்டவர்கள் எழும்பிப் பேசினர். அப்பொழுது முகமதியரோ முகமதிய மார்க்கத்திற்காகப் பேசினார். ஜைனர்கள் ஜைன மதத்திற்காகப் பேசினர். புத்த மதத்தைச் சார்ந்தவர் புத்த மதத்திற்காகப் பேசினார். அப்பொழுது ஒரு சிறு மருத்துவர், அவருடைய கடைசிப் பெயர் என்ன என்பதை நான் இந்த நேரத்தில் மறந்துவிட்டேன். எனக்கு அவருடைய பெயர் தெரியும், ஆனால் நான் அதை மறந்துவிட்டேன். அவர் கிறிஸ்தவமார்க்கத்தை சுட்டிக்காட்டிப் பேசினார். அப்பொழுது அவர் அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமாவில் வசித்துவந்த பெண்மணி மேக்பீ என்பவளின் கதையைக் கூறினார். அவள் வெறுக்கத்தக்க சினம் உடைய மிகக் கீழ்த்தரமானவளாயிருந்தபடியால், அவர்கள் அவளைக் கொல்லச் சென்றபோதுகூட, தங்களுடையக் கரங்களைக்கூட அவள் மீது வைக்க விரும்பவில்லை. அவள் அவ்வளவு இழிவான நயநாகரீகமற்றவளாயிருந்தாள். எனவே அவள் ஒரு சுருட்டு புகைத்துகொண்டு, நான்கு குதிரைகள் பூட்டிய குதிரை வண்டியை ஓக்லஹோமாவில் உள்ள வேகக் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி வீதியினூடாக ஓட்டிச் சென்றதற்கான ஒரு குற்றத்தை சுமத்தி, அவர்கள் அவளை கைது செய்திருந்தனர். அவள் மிகவும் கீழ்த்தரமானவளாயும், அசுத்தமானவளாயுமிருந்தபடியால், சமுதாயத்தில் நற்பண்புகொண்டவர்கள் அவளிருந்த இடத்தில் அவளிடம் எவ்வித தொடர்பும் கொள்ளாமலிருந்தனர். எனவே அவளைத் தூக்கிலிடப் போவதாயிருந்தவர்கள், அவளைத் தூக்கிலிட்டுக் கொல்ல விரும்பவில்லை. ஆகையால் அவர்கள் நிலக்கரியிலிருந்து எடுக்கப்பட்ட கரி எண்ணெய்யை அவள் மீது ஊற்றி, பின்னர் பறவைகளின் சிறகுகளையும் கொட்டி அவளைக் கொன்றனர். இந்தச் சிறு பிரசங்கியார் அவளுடையக் கதையை அப்பேர்ப்பட்ட ஒரு பாணியில் கூறினபோது, அடுத்து என்னவாயிருக்கும் என்று ஜனங்கள் தங்கள் இருக்கையின் முனைகளில் அமர்ந்து கூர்ந்து கவனிக்கும்படியாக அவர் கூறினார். அவர் அதைக் கூறி முடிக்கும்போது, சட்டங்களும் கூட தண்டனை வழங்காமல் அவளோடு நேரத்தை வீணாக்க விரும்பாத அளவிற்கு அவள் மிகவும் கீழ்த்தரமாயும், அசுத்தமாயும், இழிவாயுமிருந்தைக் கூறினார். கிட்டத்தட்ட அவர் அந்தக் கதையை கூறினவிதம் நரகத்தில் உள்ள பிசாசு கூட அப்படிப்பட்ட ஒரு நபரை புறக்கணித்துவிடும் என்பது போன்றிருந்தது. அதன்பின்னர் அவர், “மத உலகின் பெருந்தகையோரே, பெண்மணி மேக்கபீயின் கரங்களை சுத்தம் செய்யக் கூடிய ஏதோ ஒன்றை உங்களுடைய மார்க்கம் பெற்றுள்ளதா?” என்று கேட்டார். 83 ஒவ்வொருவரும் அப்படியே அமைதியாயிருந்தனர். அதன்பின்னர் அவர் தன்னுடைய கரங்களைத் தட்டி, ஆகாயத்தில் குதிப்பது போன்று குதித்தார். மேலும் அவர், “தேவனுக்கு மகிமை உண்டாவதாக! இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அவளுடைய கரங்களை மாத்திரம் சுத்தம் செய்வதுமல்லாமல், அவளுடைய இருதயத்தையும் சுத்தம் செய்து, அவளை அவருடைய மணவாட்டியாக்கும்” என்றார். உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆச்சரியமான கிருபையாயிற்றே! எப்படியாய் அந்த இனிமையான சத்தம், என்னைப் போன்ற ஒரு இழிஞனை இரட்சித்ததே! நான் ஒரு காலத்தில் காணப்படாமற் போனேன், ஆனால்…நான் இப்பொழுதோ கண்டுபிடிக்கப்பட்டேன், நான் குருடனாயிருந்தேன், ஆனால் இப்பொழுது நான் காண்கிறேன். கிருபையே பயப்பட என் இருதயத்திற்கு போதித்து, என் பயங்களை போக்கியது கிருபையே, நான் முதலில் விசுவாசித்த வேளையில், அந்தக் கிருபை எவ்வளவு விலையேறப் பெற்றதாய் தோன்றினது! 84 நிச்சயமாகவே. “நாம் இப்படிப்பட்டதை புறக்கணிப்போமேயானால், நாம் எப்படி தப்பித்துக்கொள்வோம்?” நீங்கள் சாப்பிட மறுத்தால், நீங்கள் மரித்துப் போவீர்கள். நீங்கள் காரோட்டிச் செல்லுகையில், ஒரு மூலையில் திரும்ப மறுத்தால், நீங்கள் சேதமடைவீர்கள். நீங்கள் பசுவின் பாலைக் கறக்க மறுத்தால், பசுவினுடைய மடி காய்ந்து போய்விடும். நீங்கள் உங்களுடைய பற்களை பராமரிக்க மறுத்தால், நீங்கள் அவைகளைப் பிடுங்க வேண்டியதாயிருக்கும். நிச்சயமாக. நீங்கள் உங்களுடையப் புறக்கணிப்பிற்கான விளைவை அனுபவிப்பீர்கள். 85 ஓ பிரான்ஹாம் கூடாரமே, வருகைப் புரிந்துள்ளோரே, நான் இப்பொழுது உங்களுக்கு ஒரு காரியத்தைக் கூறட்டும். தேவனுடைய மகிமையைக் குறித்து சாட்சிப் பகர நீங்கள் புறக்கணித்தால், தேவனுக்கு துதியையும், மகிமையையும் தர நீங்கள் புறக் கணித்தால், அப்பொழுது இந்நாட்களில் ஒன்றில் நீங்கள் உங்களை குளிர்ந்துபோன, சம்பிரதாயமான, பின்வாங்கிப்போனவர்களாயிருப்பதைக் கண்டடைவீர்கள். நீங்கள் தேவனுக்கு துதியை செலுத்துங்கள். “இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால், தண்டனைக்கு எப்படி தப்பித்துக் கொள்வோம்?” 86 நேரம் கடந்து கொண்டேயிருக்கிறது. சகோதரன் டாம்ஸ் அங்கே பின்னால் நடந்து சென்றதை நான் கவனிக்க நேர்ந்தது. கர்த்தருக்கு சித்தமானால் நாம் இப்பொழுது முடித்துவிட்டு, பின்னர் இன்றிரவு இதையே தொடருவோம். நாம் சற்று நேரம் ஜெபம் செய்வோமாக. 87 எங்களுடைய பரலோகப் பிதாவே, ஸ்தோத்திரங்களும், துதிகளும், கனமும், மகிமையும், ஞானமும், பாராக்கிரமும், வல்லமையும் என்றென்றும் உமக்கே உரியது. ஓ, சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற அந்த ஆட்டுக்குட்டியானவருடையக் கரங்களில் கர்த்தத்துவங்களும், இராஜ்ஜியங்களும், ஒவ்வொன்றும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபோது, அவர், “வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் என்னுடையக் கரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நீங்கள் உலகமெங்கும் போய், சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று சத்தமிட்டுக் கூறினார். ஓ அருமையான மரிக்கும் ஆட்டுக்குட்டியானவரே, கிரயத்தினால் கொள்ளப்பட்ட தேவ சபை பாவம் செய்யாதபடி இரட்சிக்கப்படும் வரைக்கும் உமது விலையேறப் பெற்ற இரத்தம் அதன் வல்லமையை ஒருபோதும் இழந்துபோவதில்லை. 88 ஊழிக்காரர்களாகிய நாங்கள் எப்படி ஒரு சபையை வைத்திருக்க வேண்டும் என்றும், நாங்கள் இதை எப்படி வைத்திருக்க வேண்டும் என்றும், நாங்கள் ஒவ்வொரு காரியத்தையும் எப்படி வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கிறதை காண்கிறபடியால் எங்களுக்கு உதவி செய்யும். 89 எங்களுடைய ஸ்திரீகள் சபைக்கு செல்லும் முன்பு, ஒரு விதமான ஒரு குறிப்பிட்ட ஆடையை உடுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அதிக முக ஒப்பனையோடு உடை உடுத்திக் கொண்டிருக்க விரும்பி, அதே சமயத்தில் தங்களை கிறிஸ்தவர்கள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். பிரசங்கிமார்கள் தாங்கள் வருவதற்கு முன்னர் அதிகமான பணம் செலவழிக்கப்பட் வேண்டும் என்றும், ஒவ்வொரு காரியமும் இன்ன—இன்ன பிரகாரமாய் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். 90 ஓ கிறிஸ்துவே, நான் இங்கே வாசிக்கும்போது, “எப்படியாய் அவர்கள் அலைந்து திரிந்து, வெள்ளாட்டுத் தோல்களையும், செம்மறியாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு, பூமியின் வெடிப்புகளிலும், குகைகளிலும் வாழ்ந்தனர். அவர்கள் அலைந்து திரிந்து, இழிவான உபத்திரவத்தின் கீழேயிருந்தும், தேவதூதரின் ஊழியத்தின் கீழிருந்தும், அதே சமயத்தில் விசுவாசத்தை உடையவர்களாயிருந்தனர். கர்த்தராகிய இயேசுவே எங்களுக்கு அருமையான வீடுகளையும், கார்களையும், ஆடைகளையும், ஆகாரத்தையும் அளித்திருக்கும்போது, நாங்கள் எப்படி தப்பித்துக்கொள்வோம்? நாங்கள் முறுமுறுக்கிறோம். நாங்கள் சோம்பறித்தனமாக உட்கார்ந்துகொண்டிருக்கிறோம். நாங்கள் சோம்பேறிகளாயிருக்கிறோம். நாங்கள் வெளியே போய், இதைக் குறித்த ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய ஒருபோதும் முயற்சிப்பதில்லை. தேவனே, நாங்கள் எப்படித் தப்பித்துக்கொள்வோம்? 91 ஓ, கர்த்தாவே, ஜனங்கள் இதற்கு எழுச்சியடையும்படியாய் இந்தக் காலையில் ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும் கண்டித்து உணர்த்துதலை நீர் எரியச் செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். பகல் வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கும்போதே நாங்கள் பணி புரிவோமாக, ஏனென்றால் சூரியன் அதிவிரைவாய் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது. நாகரீகமோ வளர்ச்சியடைந்து கொண்டேயிருக்கிறது, இனிகாலம் செல்லாது. அது நித்தியத்திற்குள் ஒன்றாக இணைந்து விடும். 92 ஓ தேவனே, நாங்கள் எப்படி பாவிகளிடத்தில் அணுகி, அவர்களை கிறிஸ்துவினிடத்திற்கு கொண்டுவரவேண்டும் என்று அறிந்து, புதிய தரிசனத்தோடும், ஞானத்தோடும், புரிந்துகொள்ளுதலோடும் புறப்பட்டுச் செல்ல இன்றைக்கு அருள்புரியும். கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரனுடைய ஜெபத்திற்கு செவிகொடும். 93 இங்குள்ள எவரேனும் கிறிஸ்துவை அவர்களுடைய இரட்சகராக அறிந்துகொள்ளாமலிருந்தால், நீங்கள் உங்களுடையக் கரங்களை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், என்னை ஜெபத்தில் நினைவு கூருங்கள் என்று கூறுவீர்களா?” என்று நான் கேட்கிறேன். நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “என்னை நினைவு கூருங்கள். நான் ஒரு கிறிஸ்தவனாயிருக்க வேண்டும், இனி ஒருபோதும் நான் அதைக் குறித்து கவலையற்றவனாயிருக்க விரும்பவில்லை” என்று கூறுவீர்களா? ஐயா, அங்கே பின்னால் உள்ளவரே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. வேறுயாரேனும் உள்ளீர்களா? அப்படியிருந்தால், “சகோதரன் பிரான்ஹாம், நான் என்னுடைய கரத்தை உயர்த்த விரும்புகிறேன். நான் எல்லா நேரத்திலும் புறக்கணித்து வந்த கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். ஓ, நான் சபைக்கு செல்ல விரும்புகிறேன். நிச்சயமாகவே, நான் சபையைச் சார்ந்தவனாயிருக்க விரும்புகிறேன்” என்று கூறுங்கள்.